சீமைக் கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் - தமிழ்நாடு
அனைவருக்கும் வணக்கம்,
தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகவே அழித்துக் கொண்டிருக்கும் சீமை கருவேலமரம் எனப்படும் நச்சுத்தாவரம் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் இருப்பதை நாம் உடனடியாக மாற்றியமைக்க வேண்டும். இந்த வகையான தாவரங்கள்
தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆக்கிரமித்துள்ள அபாயத்தை உணர்ந்து மக்களோடு இணைந்து முதன் முதலாக இந்த நச்சுத் தாவரத்தை அழிக்கும் நடவடிக்கையில் அக்கறை செலுத்தியிருக்கும் தமிழக அரசிற்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாம் அழித்தொழிக்க வேண்டிய சீமைக் கருவேல மரம் பற்றிய சுருக்கம் :
இது ஒரு நச்சு மரம். தாவர அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களால் ஆபத்தான தாவரம் என்று அறிவித்து தடை செய்யப்பட்ட இந்த தாவரத்தின் வேதி பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா(Prosopis Juliflora). தமிழில் சீமை கருவேலம், வேலிக்காத்தான்,டெல்லி முள் , காட்டுக் கருவல், லண்டன் முள், வேலிக்கருவல் என்று பல்வேறு வட்டார பெயர்கள் இதற்குண்டு. மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா போன்ற நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட இந்த நச்சு மரம் நமது நாட்டின் வளமான பகுதிகளை சீரழிக்க சில அந்நிய சக்திகளால் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது நமக்கு வளர்ந்த வரலாறு, விதைத்த வரலாற்றை விட அவற்றை முற்றிலுமாக அழித்த வரலாறு மட்டுமே இப்போது தேவைப்படுகிறது என்பதை அனைவரும் உணர்ந்தாக வேண்டும்.
அந்நிய சக்திகளால் பரப்பும் அளவிற்கு இந்த மரம் அவ்வளவு ஆபத்தானதா என்று நீங்கள் கேட்டல் 100% ஆபத்தானது என்பதே எமது பதிலாக இருக்கும். இந்த மரங்களால் நாம் அனுபவித்துவரும் பிரச்சனைகள் சிலவற்றை இங்கே தருகின்றோம்.
1.நிலத்தடி நீர் வற்றி போய்விடுகின்றன.
2.கால்நடைகளுக்கு உணவாகும் புல் பூண்டு போன்றவற்றை வளரவிடுவதில்லை.
3.மழை இல்லாத காலங்களில் காற்றில் இருக்கும் நீரையும் எடுத்துகொள்வதால் இவை அதிகமாக பரவியிருக்கும் இடங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. மேகங்கள் குளிர்ந்து மழை பொழியும் சூழ்நிலை இதனால் உண்டாகும் வறட்சி தடை செய்துவிடுகிறது.
4.இது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்.
5.இந்த நச்சு மரத்திலிருந்து வெளிவரும் வெப்பம் உயிரினங்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறது.
விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன. ஆறு, ஏறி, கண்மாய் , குளம் என்று நீர்நிலைகளில் பரவி வந்த சீமைக் கருவேலமரம் கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நிலங்களை ஆக்கிரமித்தது. எண்ணிக்கையில் குறைந்த அளவே இருந்த காலத்தில் அடுப்பெரிக்கவும், விவசாய பகுதிகளைக் பாதுக்காக்கும் வேலியாகவும் பயன்பட்டு வந்த இந்த மரங்கள் நாளடைவில் கட்டுப்பாடற்று விதை பரவி
விவசாய நிலங்களிலும் வளர ஆரம்பித்து விட்டது. நீரின்மையால் விவசாயத்தில் சரிவர ஈடுபட முடியாமல் வறுமையில் வாடிய விவசாயிகளுக்கு தானாக வளரும் இந்த சீமை கருவேலமரங்கள் வாழ்வதற்கு தேவையான வருமானத்தை வழங்கியதால் அனைத்து பகுதியிலும் இந்த மரங்கள் பெருகிவளர வாய்ப்பாக அமைந்தது. நீர் பற்றாக்குறையால் விவசாயத்தை இழந்த மக்களுக்கு நிலத்தடியில் நீரில்லாமலும் , மேகம் கூடியும் மழை பொழியாமலும் போவதற்கு காரணமே இந்த சீமைக் கருவேலமரம்தான் என்ற உண்மை 40 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் மக்களுக்கு விளங்கிவருகிறது.
சீமைக் கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் :
2008 ம் ஆண்டு முதல் சீமை கருவேலமரம் ஒழிப்பு நடவடிக்கைகளில் பகுதி நேரமாக இராமநாதபுரம் , சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில்
ஈடுபட்டுவந்த எங்கள் குழுவினர் மக்கள் பணியில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு மாநிலம் தழுவிய பணியினை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு ஏற்றவாறு தமிழகமெங்கும் சேவகர்களை ஒருங்கிணைத்து "சீமைக் கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்" என்ற பெயரில் இயங்கி வருகின்றோம். நமது இயக்கத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் செயல்பட்டுவந்த பல்வேறு தொண்டு நிறுவனங்கள் எமது செயல்பாட்டுக்கு முழுமையான ஆதரவளித்துள்ளனர். நமது இயக்கத்தின் செயல்பாடானது நான்கு படிநிலைகளில் இயங்கி வருகிறது.
1. விழிப்புணர்வு செய்தல்
2. மரங்களை வேரோடு அழித்தல்
3. மண்ணுக்கு ஏற்ற தாவரங்களை நடுதல், ஊக்குவித்தல்
4. பராமரித்தல்
ஒவ்வொரு படிநிலையையும் சிறப்பாக செய்துமுடிக்க ஏற்றவாறு செயற்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாற்று விவசாயம் :
1. சீமைக்கருவேல மரங்களால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சரி செய்து நிலத்தின் தன்மையை பரிசோதித்து மண்ணுக்கேற்ற விவசாயம் செய்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படுகிறது.
2. விவசாயம் செய்யகூடிய நிலையில் இல்லாத நில உரிமையாளர்களிடம் நிலங்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்று விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளிடம் நிலங்கள் ஒப்படைக்கபடுகிறது.
3.தனி நபருக்கு சொந்தமில்லாத பொது இடங்களில் நச்சு மரங்களை அழித்து வனத்துறை உதவியுடன் பாரம்பரியமிக்க மரங்கள் நடப்படுகிறது.
எங்கள் முயற்சிக்கு கை கொடுங்கள் :
கடந்த நாற்பது ஆண்டுகாலமாக இந்த சீமைக் கருவேலமரங்களைப் பற்றியும் அதன் தீமைகளைப் பற்றியும் முறையான விழிப்புணர்வு இல்லாதபோது நாம் முன்னெடுத்திருக்கும் இலக்கினை அடைவதற்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி,
- அ.மாகாதேவன்
(திட்ட மேலாளர் - சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் )
தொடர்பு எண் : 9655699270